search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாத்திரைக்கு காத்திருக்கும் பக்தர்கள்
    X
    யாத்திரைக்கு காத்திருக்கும் பக்தர்கள்

    ஜம்முவில் தொடர் மழை - அமர்நாத் யாத்திரை ரத்து

    ஜம்முவில் பெய்து வரும் தொடர் மழையால் பாதைகள் மோசனமானதால் அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.
     
    இதுவரை 3.18 லட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். மேலும் பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்டத்தில் உள்ள மலையடிவார முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவிய மழைப்பொழிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மோசமாக பாதிப்பு அடைந்தது, . 

    இதையடுத்து, ஜம்முவில் உள்ள பால்டால் மற்றும் பகல்காம் வழித்தடங்களில் மலையடிவார முகாமில் இருந்து யாத்திரீகர்கள் புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×