search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசோதாவின் மீது உரையாற்றும் அமித் ஷா
    X
    மசோதாவின் மீது உரையாற்றும் அமித் ஷா

    சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது

    பாராளுமன்ற மக்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பு, வெளிநடப்புக்கு இடையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் அளிக்க வகை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் கடந்த 15-ம் தேதி ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.

    இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பு, வெளிநடப்புக்கு இடையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த மசோதா  நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக, இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பயங்கரவாதிகளை ஒடுக்கி நாட்டை பாதுகாக்க வேண்டுமானால் காவல் துறையினருக்கும் இதர விசாரணை முகமைகளுக்கும் தேவையான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அசாதுதீன் ஒவைசி

    ’ஒரு தனிநபரை பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டுமானால் அதற்கென சட்ட அங்கீகாரத்துடன் கூடிய விதிமுறைகள் அவசியம். ஐக்கிய நாடுகள் சபைக்கு இதற்கான விதிமுறைகள் உண்டு. அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இதற்கான விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன.

    இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் பலமுறை இதுபோன்ற முக்கிய சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. அப்போது அவர்கள் செய்தது சரி என்றால் இப்போது நாங்கள் செய்வதும் சரிதான்’ என்று அமித் ஷா கூறினார்.

    இந்த திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் பேசினர்.

    பின்னர், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    Next Story
    ×