search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழிவறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள்
    X
    கழிவறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள்

    கழிவறைக்குள் சமைப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை -மபி மந்திரி

    அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கழிவறைக்குள் உணவு சமைப்பதால் எவ்வித பிரச்சனையும் இல்லை என மத்திய பிரதேச மந்திரி இமார்தி தேவி தெரிவித்துள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ளது கரோரா பகுதி. இந்த பகுதியில் குழந்தைகளுக்கென அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, கழிவறையில் சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பொருட்கள் கழிவறையின் மேல் வைக்கப்படுவதாகவும், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் ஆகியவையும் அங்கேயே இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

    இது குறித்து பேசிய மத்திய பிரதேச மந்திரி இமார்த்தி தேவி, 'வீட்டில் குளியல் அறையுடன் கழிவறை இணைந்து இருந்தால் உறவினர்கள் உங்கள் வீட்டில் உணவு அருந்த மறுப்பார்களா? குளியல் அறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் கூட நமது வீடுகளில் பாத்திரங்களை வைத்திருக்கிறோம்.

    மத்திய பிரதேச மந்திரி இமார்தி தேவி

    அந்த அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும், ஸ்டவுக்கும் இடையே இடைவெளி உள்ளது. எனவே, கழிவறைக்குள் சமைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என கூறினார்.

    இச்சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரி பேசுகையில், 'நல்ல முறையில் சமையல் அறை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×