search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்ற கூட்டத்தொடர் 10 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு

    பாராளுமன்ற கூட்டத்தொடர் 10 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 26-ந் தேதி முடிவடைவதாக இருந்தது. ஆனால், பல்வேறு முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டி இருப்பதால், கூட்டத்தொடரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கட்கிழமை மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், சில எதிர்க்கட்சிகள் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், ஒரு வாரம் முதல் 10 பணி நாட்கள்வரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த யோசனை பற்றி விவாதிக்கப்பட்டது.

    பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், “கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து முடிவு எடுக்கும்போது, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.
    Next Story
    ×