search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரிடம் கடிதம் வழங்கிய குமார்சாமி
    X
    கவர்னரிடம் கடிதம் வழங்கிய குமார்சாமி

    குமாரசாமி ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்ப்பாக 105 வாக்குகளும் பெற்றதால் ஆட்சி கவிழந்தது.
    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகள் பதிவாகின. இதனால் குமார்சாமி ஆட்சி கவிழ்ந்தது.

    ராஜினாமாவை ஏற்ற கவர்னர் அலுவலகம்

    இந்நிலையில், சட்டபேரவையில் பலம் இழந்ததை தொடர்ந்து முதல் மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார், ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்தார் குமாரசாமி.

    இதையடுத்து, முதல் மந்திரி குமாரசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது என ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்துள்ளார்.
    Next Story
    ×