என் மலர்
செய்திகள்

செக்ஸ் வீடியோ வெளியானதுக்கு கட்சிக்காரர்களே காரணம் - பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு
பெங்களூரு:
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் அரவிந்த் லிம்பாவலி. பெங்களுர் மகாதேவாபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த நிலையில் அரவிந்த் லிம்பாவலி ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ வெளியானது.
இந்த விவகாரம் குறித்து கர்நாடகா சட்டசபையில் நேற்று அரவிந்த் லிம்பாவலி கதறி அழுதார்.
என்னை தொடர்புபடுத்தி போலியான ஆபாச வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இன்று எனக்கு நிகழ்ந்தது நாளை இன்னொருவருக்கு ஏற்படக் கூடாது.
இதனால் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அரவிந்த் லிம்பாவலி கூறினார்.
இந்த நிலையில் செக்ஸ் வீடியோ வெளியாவதற்கு எனது கட்சியினரும் காரணம் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. லிம்பாவலி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘ஆபாச வீடியோ வெளியானது எனக்கு எதிரான சதியாகும். எனது கட்சிக்காரர்கள் எனக்கு எதிரான சதியில் ஈடுபட்டு உள்ளனர். சரியான நேரத்தில் அவர்களது பெயர்களை வெளியிடுவேன்’’ என்றார்.