என் மலர்

  செய்திகள்

  வாலிபர் எரித்து கொலை
  X
  வாலிபர் எரித்து கொலை

  திருடன் என தவறுதலாக நினைத்து வாலிபரை எரித்து கொன்ற கொடூரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேசத்தில் வாலிபர் ஒருவரை, திருடன் என தவறுதலாக நினைத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எரித்து கொன்றுள்ளனர்.
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநிலம் பாராபங்கி பகுதியில் உள்ள தவ்கி மதியைச் சேர்ந்தவர் சுஜித் குமார்(26). இவர் கடந்த 19ம் தேதி ரகுபுரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நடந்துச் சென்றுள்ளார்.

  வரும் வழியில் சுஜித்தினை சில நாய்கள் துரத்தியுள்ளன. பயந்துப் போன அவர், அங்கிருந்த ஒரு வீட்டில் ஒளிந்துக் கொண்டார். அந்த வீட்டில் இருந்தவர்கள், அவரை திருடன் எனக் கூறி கூச்சல் போட்டுள்ளனர்.

  இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, விசாரித்துள்ளனர். சுஜித், தான் திருடன் இல்லை எனவும், நடந்ததையும் கூறியுள்ளார். ஆனால், அங்கு இருப்பவர்கள் யாரும் அதனை கேட்கவில்லை.

  சுஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தீ வைத்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயம் அடைந்த சுஜித்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்நிலையில் சுஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×