என் மலர்

  செய்திகள்

  நட்வர் சிங்
  X
  நட்வர் சிங்

  நேரு குடும்பத்தில் அல்லாதவர் காங்கிரஸ் தலைவரானால்.. -நட்வர் சிங் கணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியினை ராஜினாமா செய்தார். இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
  புது டெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

  இதனையடுத்து ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியானது.  அதன் பின்னர் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது.

  ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார் என செய்திகள் வெளியானது. அதன்படியே ராஜினாமா கடிதமும் கொடுத்தார்.

  இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ‘நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நான் காங்கிரஸ் தலைவர் இல்லை.

  நேரு குடும்பம்

  காங்கிரஸ் காரிய கமிட்டியை உடனடியாக கூட்டி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள்’ என கூறினார். இந்த ராஜினாமா,  காங்கிரஸ் தொண்டர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான நட்வர் சிங் கூறியதாவது:

  ராகுல் காந்தி ராஜினாமா செய்த பின்னர், நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு வரமாட்டார்கள் என கூறிவிட்டார்.
  நேரு குடும்பத்தில் அல்லாதோர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்தால், 24 மணி நேரத்தில் கட்சி நிச்சயம் பிளவுப்படும்.

  சோன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா காந்தி செய்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அற்புதமானது. அவர் அந்த கிராமத்தில் இருந்தபடியே விரும்பியதை செய்து காட்டிவிட்டார்.

  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் பிரியங்கா காந்திதான் என்பதற்கு, அங்கு அவர் செய்த செயல் சாட்சியாகிவிட்டது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×