என் மலர்

  செய்திகள்

  மொபைல் கேம்
  X
  மொபைல் கேம்

  அபிநந்தனை பெருமைப்படுத்தும் வகையில் புதிய மொபைல் கேம் -இந்திய விமானப்படை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது.
  புது டெல்லி:

  இந்திய விமானப்படை, தேசப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐஓஸ்,  ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் விமானப்படை மொபைல் கேம் ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் அலுவலக டுவிட்டரில் ஒரு சிறிய டீசரையும் வெளியிட்டு உள்ளது. இந்த விளையாட்டு விரைவில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மொத்தத்தில் இது இந்திய விமானப்படையின் ஒரு சிறப்பான நடவடிக்கை ஆகும். ஏனென்றால், இந்த விளையாட்டு விளையாடுபவர்களை மகிழ்விப்பது மட்டுமில்லாமல், பப்ஜி போன்ற விளையாட்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புகிறது.

  இதன் விளைவாக, விளையாடுபவர்களை எதிர்காலத்தில் மதிப்பு மிக்க இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஊக்குவிக்கலாம். இந்திய விமானப்படையின் மொபைல் கேம் டீசர், ரஷ்ய தயாரிப்பு விமானமான மிக் 21 விமானத்துடன் ஒரு போர் விமானி சண்டையிடுகிற காட்சி  காணப்படுகிறது.

  தற்செயலாக ஒரே நேரத்தில் இந்த வீடியோ கேமில் வரும் விமானியும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானும் ஒரே மாதிரி இருக்கின்றனர். 2019 ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

  இந்திய விமானப்படை அறிமுகப்படுத்தும் மொபைல் கேம்

  அதிலிருந்து தப்பிய அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் பிடியில் இருந்து 60 மணி நேரத்தில் விடுதலையானதை குறிப்பிடுகிறது. கேம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்திய விமானப்படை விளையாட்டில் போர் விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வான்வழி வாகனங்கள் உள்ளன.

  விளையாடுபவர்கள் இந்த வாகனங்களை திரை கட்டுப்பாடுகளில் விசுவலாக பார்க்கலாம், மேலும், இந்த விளையாட்டு விமானங்களையும் எதிரிகளின் விமானங்களையும் சுட்டு வீழ்த்தலாம்.

  கூடுதலாக பொழுதுபோக்கு நோக்கத்தில், இந்திய விமானப்படை கேம், நிஜமான விமானப்படை விமானிகள், விமானங்கள் நடுவானில்  பறந்து கொண்டிருக்கும்போது எரிபொருள் நிரப்புதல் போன்ற பாராட்டத்தக்க திறன்களைக் கொண்டுள்ளது.

  மொத்தமாக இது ஒரு அதிரடி ஆக்‌ஷன்களைக் கொண்ட விளையாட்டு. இது  இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடையே வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெறும். இது வெளியிடப்படவில்லை என்றாலும், இது தொழில்முறை விளையாட்டு ஸ்டூடியோக்களால் உருவாக்கப்பட்ட வழக்கமான விளையாட்டுகள் போன்ற பயன்பாட்டு கொள்முதல் எதுவும் இல்லை' என கூறினர்.

  இந்திய விமானப்படையின் மொபைல் கேம் (ஐ.ஏ.எஃப் கேம்) ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும். முதலில் இந்த விளையாட்டு ஒருவர் மட்டுமே விளையாடும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில வாரங்களில் பல பேர் சேர்ந்து விளையாடும் பதிப்பை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  Next Story
  ×