search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    8 வழிச்சாலை திட்டம்- மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கெடு

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை நாளை காலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.

    சேலம் சென்னை பசுமை வழி சாலை


    இதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட்டு விதித்த தடையை தற்போது நீக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. மேலும் 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டை அணுகினார்கள் என்றும் கேள்வி எழுப்பியது.

    அதோடு இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டை நாளை காலைக்குள் மத்திய நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கு வருகிற 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
    Next Story
    ×