என் மலர்

  செய்திகள்

  மின்னல்
  X
  மின்னல்

  உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 32 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

  இந்நிலையில், அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வானைப் பிளந்துக் கொண்டு மின்னல் சீறிப் பாய்ந்தது. அப்போது மின்னல் தாக்கி கான்பூர் மற்றும் பதேக்பூர் ஆகிய பகுதிகளில்  14 பேரும், ஜான்சியில் 5 பேரும், ஜலாவுன் பகுதியில் 4 பேரும் உயிரிழந்தனர்.

  மேலும் ஹமீர்பூர் பகுதியில் 3 பேரும், காசிப்பூர் பகுதியில் இருவரும், ஜாவுன்பூர், கான்பூர் தேகாத், சித்ராகோட், பிரதாப்கவுர் ஆகிய பகுதிகளில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மின்னல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  Next Story
  ×