என் மலர்

  செய்திகள்

  விபத்து காயம்
  X
  விபத்து காயம்

  நகரி அருகே வேன் மீது லாரி மோதல்- 8 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நகரி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நகரி:

  திருத்தணியை அடுத்த மாத்தூரை சேர்ந்தவர்கள் ஒரு மினி வேனில் திருப்பதி சென்று சாமி கும்பிட்டனர்.

  நேற்று இந்த வேன், திருத்தணிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த தடுக்குபேட்டை திருப்பத்தில் வேன் சென்றது.

  அப்போது எதிரே வந்த லாரி வேன் மீது மோதியது. இதில் வேன் பலத்த சேதம் அடைந்தது.

  இதில், வேன் டிரைவர் செல்வம், வேனில் பயணம் செய்த தினேஷ் (17), சுகுணா, செல்வி, முரளி, அஸ்வின் பானுமதி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

  டிரைவர் செல்வம் சென்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தினேஷ் திருப்பதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் நிலைமை மோசமாக உள்ளது. காயம் அடைந்த மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லாரி டிரைவர் சுரேந்திரநாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் விசாரித்து வருகிறார்.

  Next Story
  ×