என் மலர்

  செய்திகள்

  பர்த்மான் ரெயில் நிலையம்
  X
  பர்த்மான் ரெயில் நிலையம்

  மேற்குவங்காளம் பர்தமான் ரெயில் நிலையம், பதுகேஷ்வர் தத் என மாற்றப்படும் - மத்திய மந்திரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தில் உள்ள பர்த்மான் ரெயில் நிலையம், பதுகேஷ்வர் தத் ரெயில் நிலையம் என அழைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  மத்தியில் கடந்த முறை பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. 
   
  இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பர்தமான் ரெயில் நிலையத்தின் பெயர் பதுகேஷ்வர் தத் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது என மத்திய இணை மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

  பீகார் மாநில பாஜக தலைவரும், மத்திய மந்திரியுமான நித்யானந்த ராய் பீகார் மாநிலத்தின் பாட்னாவுக்கு இன்று காலை சென்றார். அங்குள்ள ஜஹான்பூர் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத் வீட்டுக்கு சென்றார். அவரது நினைவு நாளை முன்னிட்டு அங்கு சென்ற நித்யானந்த ராய் அவரது உறவினர்களை சந்தித்துப் பேசினார்.

  நித்யானந்த் ராய்

  அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்த ராய், சுதந்திரப் போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத்தை கவுரவிக்கும் வகையில், மேற்கு வங்காளத்தில் உள்ள பர்த்மான் ரெயில் நிலையம், இனி பதுகேஷ்வர் தத் ரெயில் நிலையம் என மாற்றப்பட உள்ளது என தெரிவித்தார்.

  பதுகேஷ்வர் தத் பர்த்மான் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×