என் மலர்

  செய்திகள்

  கார்கில் போர் நினைவிடத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்திய காட்சி
  X
  கார்கில் போர் நினைவிடத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்திய காட்சி

  காஷ்மீரில் கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவிடத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  ஸ்ரீநகர்:

  காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற, ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய படைகள் போரிட்டன. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போர் வெற்றியின் 20-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  இதையொட்டி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அங்குள்ள கார்கில் பகுதிக்கு சென்ற அவர், அங்கு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  பின்னர் திராஸ் பகுதியில் போர் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள வீர் பூமியையும் அவர் பார்வையிட்டார். அங்கு முக்கியமான சண்டைகள் தொடர்பான தகவல்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும் ‘நினைவு பாதை’ ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். அங்கு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தேநீர் அருந்திய ராஜ்நாத் சிங், அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பணிகளை பாராட்டினார்.

  ராஜ்நாத் சிங்குடன் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர்.
  Next Story
  ×