என் மலர்

  செய்திகள்

  நவீன பாதுகாப்பு உடை
  X
  நவீன பாதுகாப்பு உடை

  கல்வீச்சு-தாக்குதல்களை தடுக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீநகரில் அடிக்கடி கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் சிஆர்பிஎப் படையினர் காயம் அடைகிறார்கள். காயத்தில் இருந்து தப்பிக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை வழங்கப்படுகிறது.

  புதுடெல்லி:

  மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மகிளா பட்டாலியன் படை பிரிவில் 10 ஆயிரம் பெண்களும், விரைவு படையில் 2 ஆயிரம் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களை தடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அடிக்கடி கல்வீச்சு சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பாதுகாப்பு பணியில் 300 பெண்கள் சி.ஆர்.பி.எப். படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

  கல்வீச்சு மற்றும் தாக்குதல்களை தடுக்கும் போது சி.ஆர்.பி.எப். பெண்கள் படையினர் காயம் அடைகிறார்கள். இதையடுத்து கல்வீச்சில் காயத்தில் இருந்து தப்பிக்க மத்திய பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு வசதி கொண்ட உடை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 2016-ம் ஆண்டு நடந்த பெண் போலீசார் தேசிய மாநாட்டில் நவீன பாதுகாப்பு உடை குறித்து வலியுறுத்தப்பட்டது.

  இதையடுத்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டிடியூட், மத்திய பெண் போலீசாருக்கு பாதுகாப்பு உடைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பெண்களுக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உடை வடிவமைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

  இதையடுத்து சி.ஆர்.பி.எப். பெண் போலீசாருக்கான நவீன பாதுகாப்பு உடையை சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஆர்.ஆர். பத்பூகர் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

  இது குறித்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் நிறுவன இயக்குனர் புவனேஷ்குமார் கூறியதாவது:-

  இந்த நவீன பாதுகாப்பு உடையானது உடலில் விலா எலும்பு பகுதி, கைகளின் பின்புறம், தொடை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

  இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். பாதுகாப்பு உடை 6 கிலோ எடையில் இருக்கும்’ என்றார்.

  சி.ஆர்.பி.எப். ஐ.ஜி. அனுபம் குல்ஸ்ரஸ்தா கூறும்போது, ‘நவீன பாதுகாப்பு உடை கத்திக்குத்தில் இருந்தும், ஆசிட் வீச்சில் இருந்தும் தப்பிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முன்மாதிரி உடைகள் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது.

  விரைவில் நிறைய நவீன பாதுகாப்பு உடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம். ஏற்கனவே ஆண்களுக்கு நவீன பாதுகாப்பு உடை தயாரிக்கப்பட்டு வருவதால் பெண்களுக்கும் தயாரிப்பதில் எளிதாக இருக்கும்’ என்றார்.

  சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. மோசஸ் தினகரன் கூறும் போது, ‘பெண்களுக்கான பாதுகாப்பு உடை அனைத்து அளவிலும் தயாரிக்கப்படும். மத்திய ரிசர்வ் படையில் ஆண் போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு உடையில் உள்ள அதே தரத்தில் உருவாக்கப்படும்.

  இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்த பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். நவீன பாதுகாப்பு உடை அதிக அளவில் தயாரிக்கப்பட்ட பிறகு மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படை பிரிவினருக்கும் வழங்கப்படும்’ என்றார்.

  Next Story
  ×