search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் ரமேஷ்குமார்.
    X
    சபாநாயகர் ரமேஷ்குமார்.

    கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

    கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார்.
    பெங்களூரு:

    கர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பாக இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்து பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்திருந்தார்.

    ஆனால், கவர்னர் விதித்த கெடு நேரம் முடிந்தும் வாக்கெடுப்பு நடைபெறாததால் அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் இன்னும் தீரவில்லை. இதற்கிடையே, சட்டசபையை 3 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என முதல் மந்திரி குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பினார். 

    நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முழுமையான விவாதம் நடந்த பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது. 

    திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த சபாநாயகரிடம் ஆளும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் 2 முறை கடிதம் எழுதியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஆளும் கூட்டணி அரசின் கோரிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதம் நடைபெற்றது. சபாநாயகர் ரமேஷ்குமார். கர்நாடக சட்டப் பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார்.
    Next Story
    ×