என் மலர்

  செய்திகள்

  சுரேந்திர நாத் சிங்
  X
  சுரேந்திர நாத் சிங்

  ம.பி.யில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக முன்னாள் எம்எல்ஏ கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேசத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திரா நாத் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
  போபால்:

  மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சுரேந்திர நாத் சிங். போபாலில் உள்ள ரோஷன்புரா பகுதியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுரேந்திர நாத் சிங் கலந்து கொண்டார்.

  அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காதவர்களின் ரத்தம் தெருவில் தெளிக்கப்படும். அது கமல்நாத்தின் ரத்தமாகவும் இருக்கலாம் என ஆவேசமாக பேசினார். இவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கூறி பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர நாத் சிங்கை போலீசார் இன்று கைது செய்தனர்.
  Next Story
  ×