search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவர் விஜிகுமார்
    X
    டிரைவர் விஜிகுமார்

    கேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு

    கேரள மாநிலத்தில் லாரி டிரைவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான ரூ.80 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. இப்பணம் மூலம் மகளின் எம்.பி.பி.எஸ். படிப்பு கனவை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் குதிரை குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜிகுமார் (வயது 46). டிப்பர் லாரி டிரைவர்.

    விஜிகுமார் ஓட்டிய லாரியின் உரிமையாளர் மோகனுடன் சேர்ந்து இருவரும் தனித்தனியாக கேரள அரசு லாட்டரி சீட்டு வாங்கி இருந்தனர்.

    லாரி உரிமையாளர் மோகன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்து இருக்கிறதா? என்பதை பார்க்க சென்றபோது லாரி டிரைவர் விஜிகுமாருக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80லட்சம் விழுந்திருப்பது தெரிய வந்தது.

    லாரி உரிமையாளர் மோகன், இத்தகவலை டிரைவர் விஜிகுமாருக்கு தெரிவித்தார். அவர், மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். லாட்டரியில் கிடைத்த பரிசு பணம் மூலம் மகளின் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

    லாரி டிரைவரான எனக்கு, மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கான படிப்பு செலவிற்கு கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தேன். இதற்காக வீட்டையும் அடமானம் வைத்தேன். 6 மாத அலைக்கழிப்பிற்கு பிறகு கடந்த வாரம்தான் ரூ.15 லட்சம் கடன் கிடைத்தது.

    அந்த பணத்தை வாங்கும் முன்பு லாட்டரியில் முதல் பரிசு ரூ.80 லட்சம் விழுந்துள்ளது. அந்த பரிசு சீட்டை கடன் வாங்கிய வங்கியிலேயே டெபாசிட் செய்வேன். என் மகளின் எம்.பி.பி.எஸ். படிப்பு கனவை இதன் மூலம் நிறைவேற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×