search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா, சரத்பவார்
    X
    மம்தா, சரத்பவார்

    மம்தா, சரத்பவார் கட்சிகளின் தேசிய அந்தஸ்து ரத்தாகிறது - தேர்தல் ஆணையம் நோட்டீசு

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் மம்தா மற்றும் சரத்பவார் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுபோல திரிணாமுல் காங்கிரசுக்கு 22 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தது.

    தேர்தலில் 6 சதவீதம் வாக்குகள் பெற்று இருந்தால்தான் ஒரு கட்சிக்கு அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் வழங்கும். அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இடங்கள் கிடைத்தால்தான் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை ஒரு கட்சியால் பெற முடியும்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இதுவரை தேசிய கட்சி என்ற அந்தஸ்துடன் இருந்தன. பாராளுமன்றத் தேர்தலில் இந்த கட்சிகளுக்கு படுதோல்வி ஏற்பட்டது.

    இதன் காரணமாக தேசியவாத காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கின்றன. தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று இந்த கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஆகஸ்டு மாதம் 5-ந்தேதிக்குள் இதற்கு பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. எனவே ஆகஸ்டு 2-வாரத்துடன் மம்தா, சரத்பவார் கட்சிகளுக்கு தேசிய அந்தஸ்து பறிபோய் விடும்.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஏற்கனவே தேசிய அந்தஸ்தை இழந்து விட்டன. எதிர்காலத்தில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சி மட்டுமே தேசிய அந்தஸ்துடன் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×