search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி
    X
    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி போக்சோ சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் அதிகரித்துவரும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்ணியமான குழந்தை பருவத்துக்காகவும் பல்வேறு குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க ஏதுவாக சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகிறது.

    16 வயதுக்கு குறைவான குழந்தைகளை கொடூரமான முறையில் கற்பழித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை வழங்கப்படும். ஆனால் இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படும். அதாவது அவர் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும். அதோடு அபராதமோ, மரண தண்டனையோ விதிக்கவும் வழிகாணப்பட்டுள்ளது.

    குழந்தைகளை ஆபாச படங்களில் ஈடுபடுத்தினால் அபராதத்துடன், 5 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அவர் 2-வது முறையும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அபராதத்துடன் 7 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த சட்டதிருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×