என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு
Byமாலை மலர்18 July 2019 4:36 PM GMT (Updated: 18 July 2019 4:36 PM GMT)
பீகாரில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகினர். இங்கு வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பீகாரில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளநீர் அபாயக்கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதனால் வெளியேறும் உபரிநீர் மக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் சூழ்ந்ததால் பல ஊர்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×