என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Byமாலை மலர்18 July 2019 10:54 AM GMT (Updated: 18 July 2019 10:54 AM GMT)
பாகிஸ்தான் சிறையில் குல்பூஷன் ஜாதவ் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியாக பணியாற்றிய குல்பூஷன் ஜாதவ், 2016-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி பாகிஸ்தானை உளவு பார்த்ததாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு மார்ச் 26-ந்தேதி இந்தியாவுக்கு தகவல் கொடுத்தது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவ்வுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு, நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு மே 9-ந்தேதி ஜாதவ்வுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் குல்பூஷன் ஜாதவ்வுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தான் அரசு ஜாதவை தொடர்பு கொள்வதற்கான இந்திய அரசின் உரிமையை மறுத்துள்ளது.
ஜாதவ்வுக்கு உரிய சட்ட விதிகளை வழங்கவில்லை. விபன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது என்று தீர்ப்பளித்தனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தான் நீதிமன்றத்திலும், குல்பூஷன் ஜாதவ்வுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதேபோல் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பாராளுமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசும்போது, பாகிஸ்தான் சிறையில் குல்பூஷன் ஜாதவ் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜாதவ் வின் நியாயம் நிரூபணமாகி இருக்கிறது.
எனவே குல்பூஷன் ஜாதவை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றார்.

Next Story
×