என் மலர்

  செய்திகள்

  சுப்ரீம் கோர்ட்
  X
  சுப்ரீம் கோர்ட்

  அயோத்தி வழக்கு- சமரச குழுவின் அறிக்கை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயோத்தி விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட சமரச குழு தனது இடைக்கால அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது.
  புதுடெல்லி:

  அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  இந்த அப்பீல் மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இதுபற்றி கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பதற்காக ஒரு மத்தியஸ்தர் குழுவை அமைத்தது.

  சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் அந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

  இந்த குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

  அயோத்தி


  இதற்கிடையே அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

  இந்த மனு மீதான விசாரணை தற்போதைய நிலவரத்தை ஜூலை 18-ந் தேதிக்குள் சமரச குழு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

  சமரச குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. இதற்கிடையே அயோத்தி விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட சமரச குழு தனது இடைக்கால அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது.

  இந்த இடைக்கால அறிக்கை ரகசியமாக வைக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு அறிவித்தது.

  சமரச குழு தொடர்ந்து ஜூலை 31-ந்தேதி வரை பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், இறுதி அறிக்கை ஆகஸ்டு 1-ந்தேதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

  அதைத் தொடர்ந்து அயோத்தி வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 2-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
  Next Story
  ×