search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா பேட்டியளித்த காட்சி
    X
    எடியூரப்பா பேட்டியளித்த காட்சி

    நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி கட்சி தோற்கும் - எடியூரப்பா

    நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்கும் என்பது உறுதி என பா.ஜனதா மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி கர்நாடக சட்டசபைக்கு இன்று காலை பா.ஜனதா மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா வந்தார்.

    சட்டசபைக்குள் செல்வதற்கு முன்பு அவர் நிருபர்களிடம் கூறும்போது:-

    நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்கும் என்பது உறுதி. 105 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் 101 சதவீதம் பா.ஜனதா நம்பிக்கையுடன் உள்ளது என்று கூறிவிட்டு சட்டசபைக்குள் சென்றார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதையொட்டி கர்நாடக சட்டசபை கட்டிடம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கட்டிடமான விதான் சவுதா பகுதியைச் சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு உள்ளது.
    Next Story
    ×