search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்
    X
    மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்

    அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் - மத்திய அரசு தகவல்

    அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகரித்து உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், மக்களவையில் உறுப்பினர்களின் கேள்வி ஒன்றுக்கு நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்பட்டு உள்ள இடஒதுக்கீடு குறித்த கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நிலவர அறிக்கையை 78 அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகள் அளித்து இருக்கின்றன. இதில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி 2016 ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி எஸ்.சி. பிரிவினர் 17.49 சதவீதம், எஸ்.சி. பிரிவினர் 8.47 சதவீதம் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 21.57 சதவீதம் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பரிந்துரை அளவு முறையே 15 மற்றும் 7.5 சதவீதம் ஆகும்.

    அதேநேரம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓ.பி.சி.) ஒதுக்கீட்டை பொறுத்தவரை, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பரிந்துரை அளவை விட 21.57 சதவீதம் என்பது குறைவாகும்.

    இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
    Next Story
    ×