search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சித்தூர் அருகே ஓடும் ரெயிலில் போலீஸ் எனக்கூறி 1 கிலோ நகை கொள்ளை

    சித்தூர் அருகே ஓடும் ரெயிலில் கோவை நகை வியாபாரியிடம் போலீஸ் வேடத்தில் 1 கிலோ நகையை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    கோவையை சேர்ந்தவர் முகுந்தன் ராஜன் (45). இவர் கோவையில் தங்க நகைகளை தயாரித்து மொத்தமாக நகை கடைகளுக்கு விற்பனை செய்த வந்தார்.

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் பெற்று விற்பனை செய்வது வழக்கம். இவர் அடிக்கடி ரெயில் கடப்பா சென்று பொதட்டுரில் நகை விற்பனை செய்வதை ஒரு கும்பல் நோட்டம் விட்ட வந்துள்ளனர்.

    கடந்த 11-ந் தேதி கோவையில் இருந்து 1 கிலோ 80 கிராம் நகைகளை எடுத்து கொண்டு ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடப்பாவுக்கு புறப்பட்டார்.ரெயில் சித்தூரில் நின்றது.

    அப்போது போலீஸ் உடையில் 3 பேர் முகுந்தன் ராஜன் பயணம் செய்த பெட்டியில் ஏறினர். ரெயில் பாகாலா ரெயில் நிலையத்தில் நின்றபோது போலீஸ் வேடத்தில் இருந்தவர்கள் முகுந்தன் ராஜனிடம் நீங்கள் வைத்திருக்கும் நகைகளுக்கு உண்டான ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டனர். அவர் ஆவணங்கள் இல்லை என கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரை ரெயிலில் இருந்து கீழே இறக்கி ரெயில்வே குடியிருப்புக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அவரிடம் இருந்த நகைபையை வாங்கி கொண்டு நாளை பாகாலா போலீஸ் நிலையத்திற்கு வந்து நகைகளுக்கு உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று செல்லுமாறு கூறிவிட்டு நகை பையை எடுத்து சென்றனர்.

    மறுநாள் பாகாலா போலீஸ் நிலையத்திற்கு சென்ற முகுந்தராஜன் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம் போலீசார் தன்னிடம் இருந்த நகைகளை வாங்கி வந்ததாக கூறினார்.

    அனால் பாகாலா போலீசார் யாரும் நகை வாங்கி வரவில்லை என கூறியதால் முகுந்தராஜன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று மாலை பாகாலா ரெயில் நிலையத்தில் சுற்றி திறிந்த ராஜசேகர் (40), புல்லாரெட்டி (38) பிரசாத் (39) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முகுந்தராஜனிடம் போலீஸ் வேடத்தில் நகை பறித்ததை ஒப்பு கொண்டனர்.

    இதையடுத்து பாகாலா மலை பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 1 கிலோ 80 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யபட்ட நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×