search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    ஒடிசாவில் கடந்த 4 ஆண்டுகளில் யானைகள் தாக்கி 369 பேர் பலி

    ஒடிசா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் யானைகள் தாக்கி மொத்தம் 369 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஓடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது மாநிலத்தில் யானைகள் தாக்குதல் தொடர்பான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

    இந்த கேள்விக்கு பதிலளித்த மாநில வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி
    பி.கே.அருஹா
    கூறியதாவது:



    ஒடிசா மாநிலத்தில் 2015-ம் ஆண்டு முதல் தற்போதுவரை நடைபெற்ற யானைகள் தாக்குதலில் 369 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலின் காரணமாக 207 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காடுகள் அழிக்கப்படுதல், போதிய உணவு கிடைக்காமை போன்ற காரணங்களால் யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை தாக்குகின்றன.  ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள காடுகளில் இருந்தும் யானைகள் ஓடிசாவுக்குள் வருகிறது.

    இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை குறைக்க  யானைகள் நடமாடும் காட்டுப் பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் யானைகள் வருவதை கண்காணிக்க காடுகளில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள், அகழிகள் தோண்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×