search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்ஜல் மீனா
    X
    ராம்ஜல் மீனா

    நேரு பல்கலைக்கழகத்தின் செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் -நெகிழ்ச்சி தருணம்

    டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், இப்போது அதே பல்கலைக்கழகத்தில் மாணவராக சேர உள்ளார். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.
    புது டெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பஜேரா கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜல் மீனா(34). பள்ளிப்படிப்பை தனது கிராமத்திலேயே முடித்தார். அதன்பிறகு படிக்க வசதி இல்லாததாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் படிக்க முடியவில்லை.

    ராம்ஜல் கடந்த 2014ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். செக்யூரிட்டி பணியில் சேர்ந்தபிறகும், தனக்கு இருந்த படிப்பின் மீதான ஆர்வத்தினை ராம்ஜலால் விடமுடியவில்லை.

    இதனால் பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியோடு பணி நேரம் போக மீதி நேரத்தில் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தயாரானார் ராம்ஜல்.

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

    இந்த நுழைவுத்தேர்வில் ராம்ஜல் தற்போது தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதனையடுத்து ராம்ஜல் அப்பல்கலைக்கழகத்தில் பி.ஏ ரஷ்ய பாடப்பிரிவு தேர்வு செய்து மாணவராக உள்ளே நுழைய உள்ளார்.

    இந்நிலையில் ராம்ஜலுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவர் மட்டுமே சம்பாதித்து வருவதால் குடும்பத்தைப் பார்க்க வேறு யாரும் இல்லை. காலையில் மாணவராக பாடங்களை கற்றுக் கொண்டும், இரவில் வேலைப் பார்ப்பதற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதிக் கேட்டுக் கொண்டுள்ளார். 
    Next Story
    ×