என் மலர்
செய்திகள்

இடிந்த கட்டிடம்
இமாச்சலப்பிரதேசத்தில் ‘தாபா’ இடிந்த விபத்தில் 35 பேர் சிக்கினர் - 2 சடலங்கள் மீட்பு
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் இன்று உணவகம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஏராளனான ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 2 சடலங்கள் மீட்கப்படுள்ளன.
சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் குமார்ஹட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. மலைப்பாங்கான இப்பகுதியில் பிரபல ‘தாபா’ (உணவகம்) ஒன்று இயங்கி வந்தது. இந்த தாபாவுக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த உணவகம் அமைந்துள்ள கட்டிடம் இன்று மாலை திடீரென்று இடிந்து விழுந்த விபத்தில் 30 ராணுவ வீரர்கள் உள்பட 35-க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் இரு சடலங்கள் மற்றும் சுமார் 20 பேரை உயிருடம் மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகிறது.
Next Story