search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகா எல்லையில் இந்திய அதிகாரிக்ள்
    X
    வாகா எல்லையில் இந்திய அதிகாரிக்ள்

    கர்த்தார்பூர் வழித்தடம் - வாகா எல்லையில் இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் பெருவழி பற்றிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்திய அதிகாரிகள் குழுவினர் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு சீக்கிய மக்கள் யாத்திரை மேற்கொண்டு சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.  இது சர்வதேச எல்லைக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு செல்வதற்காக அமைந்த கர்த்தார்பூர் பெருவழியை பாகிஸ்தான் மூடிவிட்டது.

    இதுதொடர்பாக, கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்தியாவில் உள்ள தேரா பாபா நானக் என்ற பகுதியில் இந்த குருத்வாரா தரிசனம் செய்ய ஏற்ற வகையில் தெளிவாக தெரியும்.  அதனால் அங்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த பகுதியில் இருந்தபடியே தங்களது இறை வணக்கத்தினை செலுத்துவார்கள்.



    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத தலங்களுக்கு சென்று வருவதற்கான விதிகளுக்குள் சீக்கிய புனித தலத்தினை சேர்க்கும்படி பாகிஸ்தானிடம் கடந்த காலங்களில் பலமுறை இந்தியா கூறி வருகிறது.

    இதற்கிடையே, பாகிஸ்தானிலுள்ள வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அதிகாரிகள் கொண்ட குழுவினர் இதுபற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தலைமையில் 20 அதிகாரிகள் கொண்ட குழு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது. 

    இந்திய தரப்பில் உள்விவகாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (உள்நாட்டு பாதுகாப்பு) எஸ்.சி.எல். தாஸ், வெளி விவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்) தீபக் மிட்டல் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வாகா எல்லையை அடைந்தனர். அங்கு இருதரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×