search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற வளாகத்தில் துப்புரவு பணியில் மேற்கொள்ளும் ஹேமமாலினி
    X
    பாராளுமன்ற வளாகத்தில் துப்புரவு பணியில் மேற்கொள்ளும் ஹேமமாலினி

    துப்புரவு தொழிலாளியாக மாற முயன்ற முன்னாள் கனவுக்கன்னி -காரணம் இதுதான்

    பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
    புது டெல்லி:

    மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக மகாத்மா காந்தி கடைபிடித்து வந்த சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுவாச் பாரத்’ எனும் திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பான வகையில் அமல்படுத்துமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதில் ஒரு கட்டமாக  பாராளுமன்ற வளாகத்தை  தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய இணை நிதி மந்திரி அனுராக் தாகூர் மற்றும் மதுரா தொகுதி எம்பி ஹேமமாலினி ஆகியோர் இன்று ஈடுபட்டனர்.



    இந்த தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவரும் மிக சிரத்தையாக தரையை கூட்டிப் பெருக்கி தூய்மைப்படுத்தியபோது, குனிந்து- நிமிர்ந்து இதுவரை வீட்டு வேலைகளை செய்தறியாத இந்தி திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினி மட்டும் தரையை துடைப்பம் தொடாமலேயே படகோட்டி துடுப்பு போடும் பாணியில் பிரதமரின் உத்தரவை நிறைவேற்றினார்.

    இந்த நிலையில் ஹேமா மாலினியின் இந்த  ‘சுவாச் பாரத் சேவை’ டுவிட்டரில் இன்று  ‘டாப் டிரெண்ட்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×