search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா சட்டசபை
    X
    கோவா சட்டசபை

    கூட்டணி கட்சியை கழற்றிவிட்டது பாஜக- கோவா அமைச்சரவையில் இருந்து 4 பேர் நீக்கம்

    கோவா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்து, புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க முதல்வர் பிரமோத் சாவந்த் முடிவு செய்தார். அதன்படி அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் செய்யப்படுகிறது.

    புதிய அமைச்சர்களை சேர்ப்பதற்கு வசதியாக, ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 4 பேரை இன்று நீக்கி முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.

    கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

    துணை முதல்வர் விஜய் சர்தேசாய், நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பால்யேகர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயேஷ் சல்கோங்கர் (இவர்கள் மூவரும் கோவா பார்வர்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்), வருவாய்த்துறை அமைச்சர் ரோகன் கான்டே (சுயேட்சை) ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இவர்களுக்குப் பதிலாக, துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் லோபோ மற்றும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த 10 எம்எல்ஏக்களில் 3 பேர் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். 
    Next Story
    ×