search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா கொடி
    X
    சீனா கொடி

    தலாய்லாமா பிறந்தநாள் விவகாரம் - காஷ்மீருக்குள் 5 கி.மீ. வரை ஊடுருவிய சீன ராணுவம்

    தலாய்லாமா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீருக்குள் 5 கி.மீ. வரை ஊடுருவிய சீன ராணுவத்தால் எல்லையில் பதற்றம் நிலவியது.

    புதுடெல்லி:

    திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமாவின் 84-வது பிறந்த நாள் விழா கடந்த 6-ந்தேதி காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள டெக்சோக் செக்டார் அருகேயுள்ள கோயில் பகுதியில் கொண்டாடப்பட்டது.

    விழாவின் போது அங்கு திபெத் கொடிகள் ஏற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் விடுதலை ராணுவ வீரர்கள் 2 வாகனங்களில் இந்திய எல்லைப் பகுதிக்குள் 5 கி.மீட்டர் தூரம் ஊடுருவினர்.

    ஊடுருவியவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். அங்கு தங்கியிருக்கும் திபெத் அகதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்க மிட்டனர். மேலும் பலர் அப்பகுதியில் ஓடும் சிந்து நதியின் மறு புறத்தில் நின்றனர்.

    எல்லையில் ஊடுரு வியவர்கள் இந்திய பகுதிக்குள் சீனாவின் கொடி மற்றும் பேனர்களை கட்டினர். பேனர்களில் திபெத் மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. ‘திபெத்தை பிரிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் சீன வீரர்களை மேலும் நுழையாமல் தடுத்தனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியது.

    இந்த நிலையில் 30 முதல் 40 நிமிடங்கள் அங்கு தங்கியிருந்த சீன ராணுவ வீரர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இத்தகைய பதட்டமான சூழ்நிலைக்கு பின் இரு நாட்டு எல்லை படையினருக்கும் இடையேயான ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

    அதில் இப்பிரச்சினையை சீன ராணுவ அதிகாரிகள் எழுப்பவில்லை.

    Next Story
    ×