என் மலர்

  செய்திகள்

  ஆர்த்தி - வீரேந்திர சேவாக்
  X
  ஆர்த்தி - வீரேந்திர சேவாக்

  கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி போலீசில் புகார் -காரணம்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் என்ன என்பதை பார்ப்போம்.
  புது டெல்லி:

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். இவரது மனைவி ஆர்த்தி தொழில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்து வந்துள்ளார்.

  இணைந்து தொழில் செய்தபோது கூட்டாளிகள் ஆர்த்தியின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளனர். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஆர்த்தியையும் வசமாக சிக்க வைத்துள்ளனர்.

  இதையடுத்து ஆர்த்தி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதில், ‘எனது கணவர் சேவாக்கின் பெயரை தவறாகப் பயன்படுத்தியும், என் கையெழுத்தினை முறைகேடாகவும் பயன்படுத்தி என்னுடன் பிஸ்னஸ் செய்து வந்த கூட்டாளிகள் ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளனர்.

  வழக்குப் பதிவு

  இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.  அந்த கடனுக்காக முன் தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இன்றி திரும்பச் சென்றுள்ளன.

  எனவே, என்னை சிக்க வைத்த தொழில் கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Next Story
  ×