என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
  X
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

  மிரட்டல் மற்றும் பணபலத்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை பாஜக கவிழ்க்கிறது - ராகுல் காந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மிரட்டல் மற்றும் பணபலத்தால் பாஜக கவிழ்த்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
  அகமதாபாத்:

  கோவா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவி வருகின்றனர்.

  இந்நிலையில், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

  காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இதற்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்த எம்.எல்.ஏ.க்களை மிரட்டல் மற்றும் பண பலத்தின் மூலம் தங்கள் வசம் இழுக்கப் பார்க்கிறது. முதலில் கோவாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து தங்கள் ஆட்சியை அமைத்தனர்.

  தற்போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்திலும் மீண்டும் அதே போன்று ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் செயல்பாடு என குற்றம் சாட்டினார்.
  Next Story
  ×