என் மலர்

  செய்திகள்

  தூக்கு தண்டனை (கோப்பு படம்)
  X
  தூக்கு தண்டனை (கோப்பு படம்)

  8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை - மத்தியபிரதேச கோர்ட்டு தீர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
  போபால்:

  மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த மாதம் 8-ந்தேதி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு போம்ரா (வயது 35) என்பவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் சிறுமியை அங்கிருந்து தனிமையான பகுதிக்கு கடத்தி சென்றார்.

  அங்கு வைத்து அந்த சிறுமியை கற்பழித்தார். பின்னர் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

  சிறுமியை காணாமல் போன பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில் மறைவான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

  அதில் விஷ்ணு போம்ரா சிறுமியை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சட்டமான போக்சோ பிரிவுபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இதை விசாரித்த நீதிபதி குமுதினி பட்டேல் குற்றவாளி விஷ்ணு போம்ராவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

  சம்பவம் நடந்த ஒரு மாதத்திலேயே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×