search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோதிர் ஆதித்ய சிந்தியா
    X
    ஜோதிர் ஆதித்ய சிந்தியா

    காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? விரைவில் முடிவு எடுக்க சிந்தியா வலியுறுத்தல்

    இனியும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார் என்பதை விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரியுமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.
    போபால்:

    காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைத்துள்ள தோல்விக்கு பொறுப்பேற்று, அதன் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

    133 ஆண்டு கால பழமையான காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைவர் இல்லை. இந்த நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களையும் வழிநடத்திச்சென்ற ராகுல் காந்தி பதவி விலகி விடுவார் என கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை. இது ஒரு முக்கிய விவகாரம். தலைவராக ராகுல் தொடர வேண்டும் என முயற்சித்தோம். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார். அது பெருமிதத்துக்கு உரியது. ஒரு புதிய தலைவரை நாம் தேட வேண்டும். ஏற்கனவே காலம் கடந்து விட்டது. இனியும் தாமதிக்காமல் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
    Next Story
    ×