search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி குமாரசாமி
    X
    முதல் மந்திரி குமாரசாமி

    நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? - குமாரசாமி ஆவேசம்

    பெங்களுரூவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் முதல் மந்திரி குமாரசாமிக்கு சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, சிவக்குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி, சிவராமலிங்க கவுடா ஆகியோர் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
     
    ஆலோசனை நடத்தும் குமார்சாமி

    குமாரசாமிக்கு உதவும் வகையில் சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை ஏற்கவில்லை. ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வரும் 17-ம் தேதிக்குள் நேரில் வந்து தன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பெங்களுரூவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
    நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். இப்போது ராஜினாமா செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 
    Next Story
    ×