search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏகே சின்ஹா
    X
    ஏகே சின்ஹா

    காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்

    மத்திய நீர்வள ஆணையரான ஏ.கே.சின்ஹா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. காவிரி நதிநீர் ஆணையத்திற்கு இடைக்கால தலைவராக, மத்திய நீர்வள ஆணையரான மசூத் உசேன் நியமிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் மசூத் உசேனை நீக்கிவிட்டு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

    காவிரி

    இதற்கிடையில் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராக பதவி வகித்து வந்த  மசூத் உசைன் அண்மையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த வாரம் மத்திய நீர்வள ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமிக்கப்பட்டார். ஆனால் மசூத் உசேன் வகித்த காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பதவிக்கு யாரையும் மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது.

    இந்த சூழலில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஏ.கே.சின்ஹாவை காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×