search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ரூபாய்
    X
    இந்திய ரூபாய்

    ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்த 448 நிறுவனங்கள்

    ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக 448 நிறுவனங்கள் எடுத்துள்ளன. இவை எடுத்த மொத்த தொகை ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் கோடி ஆகும்.
    புதுடெல்லி:

    வர்த்தக நிறுவனங்கள், ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதற்காக, வங்கி கணக்கில் இருந்து ரொக்கமாக பணம் எடுக்கின்றன. அதை தவிர்க்க வைக்கும் நோக்கத்தில், ஒரே ஆண்டில் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    அந்த முடிவுக்கு மத்திய அரசை தூண்டும் வகையில், கடந்த 2017-2018 நிதியாண்டில் ஏராளமான நிறுவனங்கள் பல கோடி ரூபாயை ரொக்கமாக எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    448 நிறுவனங்கள், வங்கி கணக்கில் இருந்து தலா ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்துள்ளன. இவை எடுத்த மொத்த தொகை ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் கோடி ஆகும். அதே ஆண்டில், தலா ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சம் ஆகும். எடுத்த மொத்த தொகை ரூ.11 லட்சத்து 31 ஆயிரம் கோடி.

    தலா ரூ.1 முதல் 2 கோடி வரை எடுத்த நிறுவனங்கள் எண்ணிக்கை ஒரு லட்சம். அவை எடுத்த மொத்த தொகை ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ஆகும். தலா ரூ.2 முதல் 5 கோடி வீதம் 58 ஆயிரத்து 160 நிறுவனங்கள், மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை எடுத்துள்ளன.

    தலா ரூ.5 முதல் ரூ.10 கோடி வீதம் 14 ஆயிரத்து 552 பேர், மொத்தம் ரூ.98 ஆயிரத்து 900 கோடியை எடுத்துள்ளனர். தலா ரூ.10 முதல் ரூ.100 கோடி வீதம் 7 ஆயிரத்து 300 பேர், மொத்தம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடியை எடுத்துள்ளனர்.
    Next Story
    ×