search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமரைப்பூ
    X
    தாமரைப்பூ

    தாமரை தேசிய மலரா, யார் சொன்னது? - மத்திய மந்திரி புதிய விளக்கம்

    பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அரசு, புலி, மயில் வரிசையில் இந்தியாவின் தேசிய மலராக தாமரைப்பூ அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவித்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசிய பறவையாக மயில் மற்றும் தேசிய மலராக தாமரைப்பூ ஆகியவை விளங்கி வருவதாக நம்மில் பலர் அறிந்திருக்கிறோம்.

    இந்நிலையில், இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்தா ராய் இன்று மாநிலங்களைவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    நித்யானந்தா ராய்


    'மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசிய பறவையாக மயில் ஆகியவற்றை அங்கீகரித்து இதற்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.

    ஆனால், தேசிய மலர் விவகாரத்தில் அப்படி எந்தவொரு அறிவிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை’ என தனது பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×