search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    சபாநாயகருக்கு அட்வைஸ் செய்யுங்கள் - கர்நாடக கவர்னரை சந்தித்து எடியூரப்பா மனு

    பதவி விலகிய 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகரை அறிவுறுத்தக்கோரி கர்நாடக மாநில கவர்னரிடம் எடியூரப்பா இன்று மனு அளித்தார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் ஒட்டுமொத்தமாக மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மையை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான எடியூரப்பா இன்று பிற்பகல் அம்மாநில கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    பதவி விலகிய 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று, நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு அறிவுறுத்தக்கோரி கவர்னரிடம் எடியூரப்பா மனு அளித்தார்.

    குமாரசாமி


    இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் சேர்த்து சட்டசபையில் பாஜகவின் பலம் தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது. எனவே, தார்மீக நெறிகளின்படி முதல் மந்திரியாக நீடிக்க குமாரசாமிக்கு எந்த தகுதியும் இல்லை.

    தற்போது நிலவிவரும் அரசியல் சூழலில் மக்களின் நலன் கருதி கவர்னர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தனது மனுவில் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×