search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உபி பேருந்து விபத்தில் உயிர் தப்பிய சுனிதா
    X
    உபி பேருந்து விபத்தில் உயிர் தப்பிய சுனிதா

    உபி பேருந்து விபத்தில் உயிர் தப்பிய பெண்ணின் கதறல் -மருத்துவமனையையே உலுக்கியது

    உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பெண் ஒருவரின் கதறல் மருத்துவமனையையே உலுக்கியது.
    ஆக்ரா:

    உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து புதுடெல்லி நோக்கி இரண்டடுக்கு கொண்ட அரசு பேருந்து ஒன்று, கடந்த 8ம் தேதி அன்று காலை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    குபேர்பூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த பேருந்து விபத்தில் சிக்கி, பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் சுனிதா.

    இவர் தன் கணவர், மகன், மகள் ஆகியோருடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். விபத்துக்குப் பின்னர், சுனிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மயக்க நிலையில் இருந்து கண் விழித்து மருத்துவர்களைப் பார்த்து என் கணவர் எங்கே? மகள் எங்கே? எனக் கேட்டுள்ளார். அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வேண்டி, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் வந்துள்ளனர். ஆனால், கணவரை பார்த்தால் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.

    உபியில் விபத்துக்குள்ளான பேருந்து

    மருத்துவமனை ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களுக்கு வேறு அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர். அதன்பின்னரே, அவர் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

    அவர் பின்னர் புலம்பும்போது, தனது கணவருக்கு டெல்லியில் புதியதாக இரும்பு பாலிஷ் செய்யும் வேலை கிடைத்ததாகவும் புதிதாக வாழ்வை தொடங்கலாம் என்பதற்காக சென்றதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் மருத்துவமனையையே உலுக்கியது.

    அவரிடம் கணவர், மகள் இறந்தனர் என்பதை எப்படி கூறுவது என தெரியாமல் மருத்துவர்கள், ஊழியர்கள் திணறி வருகின்றனர். இது குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை பட்டியலில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அதன் அடையாளங்களைக் கூறி சுனிதாவிடம் கேட்டேன்.

    என் குழந்தைதான் என பதில் கூறினார். அவரது மன நிலை, உடல் நிலை சரியாக இல்லை. எனவே, அவரிடம் குழந்தை இறந்ததை கூறாமல் சென்றுவிட்டேன்’ என கூறினார்.

     




    9.16
    Next Story
    ×