search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் விடப்பட்ட நண்டுகள் - மந்திரி தனாஜி சாவந்த்
    X
    வீட்டில் விடப்பட்ட நண்டுகள் - மந்திரி தனாஜி சாவந்த்

    மந்திரி வீட்டில் நண்டுகளை விட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

    மகாராஷ்டிராவில் நீர்வளத்துறை மந்திரி வீட்டில் நண்டுகளை விட்டு தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் இருந்த திவாரே அணை நிரம்பி வழிந்தது. கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அணையின் ஒரு பகுதி  உடைந்து 7 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

    அணை உடைந்து வெளியேறிய தண்ணீரால் 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 18 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகினர். இந்த அணை உடைந்தது குறித்து மகாராஷ்டிரா மாநில நீர்வளத்துறை மந்திரி தனாஜி சாவந்த் பேசுகையில், ‘திவாரே அணை 2004ம் ஆண்டுதான் கட்டப்பட்டது.

    திவாரே அணை

    அணை கட்டப்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. அங்கு இருந்த நண்டுகள்தான் காரணம். அந்த அணையில் நண்டுகள் பல சேர்ந்து தடுப்பினை பலவீனம் அடையச் செய்துள்ளன. அதனால்தான் இந்த அணை உடைந்தது’ என பேசினார். இது மாபெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

    அணையினை சரிசெய்வதை விடுத்து இவ்வாறு பேசிய மந்திரி வீட்டில் புகுந்த தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு பெட்டி நிறைய நண்டுகளை கொண்டுவந்து தனாஜியின் வீட்டினுள் போட்டனர். பின்னர் வீட்டின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







    Next Story
    ×