search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட் சம்மன்

    எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு, குஜராத் கோர்ட் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
    அகமதாபாத்:

    கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,

    இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம்சாட்டுகிறேன். நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே, சமஸ்த் குஜராத்தி மோத் மோடி சமாஜம் என்ற அமைப்பின் சார்பில் சூரத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 16ம் தேதிக்கு முன் ராகுல் காந்தி சூரத் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
    Next Story
    ×