என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை மந்திரி
  X
  பிரதமர் மோடியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை மந்திரி

  பிரதமர் மோடியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயெத் அல் நய்ஹான் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  புதுடெல்லி:

  ஐக்கிய அரபு அமீரகம் என்னும் கூட்டமைப்பில் துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மன் உள்ளிட்ட 7 அரபு நாடுகள் அமைந்துள்ளன.

  பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன.

  2013-ம் ஆன்டு கணக்கெடுப்பின்படி 80 லட்சம் வெளிநாட்டினர் உள்பட சுமார் ஒருகோடி மக்கள் இந்நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். மேற்கண்ட 7 நாடுகளை சேர்ந்த ஒருவர் சுழற்சி முறையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக பதவி ஏற்று வருவது வழக்கமாக உள்ளது.

  ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தற்போது சேக் கலீபா பின் சயத் அல் நகியான் பதவி வகிக்கிறார். பிரதமராக இருக்கும் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தலைமையிலான மந்திரிசபையில் வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கும் ஷேக் அப்துல்லா பின் சடெத் அல் நய்ஹான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

  இந்நிலையில், ஷேக் அப்துல்லா பின் சடெத் அல் நய்ஹான் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்


  இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.
  Next Story
  ×