என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  காந்தியின் 150வது பிறந்தநாள் -பாதயாத்திரை செல்ல பாஜக எம்பிக்களுக்கு மோடி வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பாஜக எம்பிக்களை 150கிமீ பாதயாத்திரை செல்லும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
  புது டெல்லி:

  மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்றது. இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார்.

  இந்த தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினெட் உறுப்பினர்கள், மாநில முதல் மந்திரிகள் மற்றும் காந்தியை பின் தொடரும் தொண்டர்கள் பலர் உள்ளனர்.

  மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா

  இதனையடுத்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில்,  மத்திய அரசு வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு, 15கிமீ வீதம் மொத்தம் 150கிமீ தொலைவிற்கு, அவரவர் தொகுதியில் இருந்து பாதயாத்திரை செல்லுமாறு பாஜக எம்பிக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது குறித்து நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், 'இந்த பாதயாத்திரையை மேற்கொள்ளுமாறு மோடி கூற மிக முக்கிய காரணம் கிராமங்களின் மறுமலர்ச்சியே ஆகும்' என கூறியுள்ளார்.
  Next Story
  ×