search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீரில் இருந்து மீட்கப்படும் வாகனம்
    X
    மழைநீரில் இருந்து மீட்கப்படும் வாகனம்

    இது மழையால் ஏற்பட்ட பாதிப்பா?

    மும்பை கனமழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மோட்டார்சைக்கிள் அதில் சிக்கிக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



    மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரல் பதிவு மக்களின் கோபத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. அந்த வைரல் வீடியோவில் மோட்டார்சைக்கிள் ஒன்று மும்பை மழையால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த வீடியோ அடங்கிய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும் மழையால் பள்ளம் ஏற்படும் அளவுக்கு மாநகராட்சி சாலைகளின் நிலை இருக்கிறது என நெட்டிசன்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர். இந்த வீடியோ மும்பையின் தானே மாவட்டத்தின் அருகில் உள்ள செம்பூர் பகுதியில் எடுக்கப்பட்டதாக பரப்பப்படுகிறது.

    பள்ளத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிள் - வைரல் ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில், வீடியோ மகராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த மாவட்டம் மும்பையில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. வீடியோவில் இருக்கும் சம்பவம் ஜூலை 2 ஆம் தேதி நடந்திருக்கிறது.

    வீடியோவில் சாலையில் ஓடும் மழைநீரில் இருந்து மோட்டார்சைக்கிளை சிலர் வெளியே எடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 45 வினாடிகள் ஓடும் வீடியோவினை ட்விட்டரில் பலர் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வீடியோவை பகிர்வோர், மும்பை மாநகராட்சியின் அலட்சியபோக்கை சாடியும் வருகின்றனர்.

    உண்மையில் மோட்டார்சைக்கிள் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. வீடியோ எடுக்கப்பட்ட சாலை முழுக்க தண்ணீர் வெள்ளம் போன்று சூழந்து கொண்டதால், மோட்டார்சைக்கிள் மூழ்கியது. இதனை வெளியே எடுக்கும் வீடியோவினை நெட்டிசன்கள் தவறான தகவலுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
    Next Story
    ×