search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன் அப்படி கூறினாரா? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அப்படி சொன்னதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவலின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய அரசு உஜாலா திட்டத்தின் கீழ் சுமார் 35,000 கோடி எல்.இ.டி. பல்புகளை வழங்கி இருப்பதாக தெரிவித்தாரா? இது உண்மையாகும் பட்சத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் மோடி அரசாங்கம் சுமார் 300 பல்புகளை வழங்கியதாக இருக்கும்.

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் வீடியோ காட்சிகளின் கீழ், 35,000 கோடி எல்.இ.டி. பல்புகள் வழங்கப்பட்டுள்ளன எனும் தலைப்பு கொண்ட பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இது நிர்மலா சீதாராமன் தலைப்பில் இருக்கும் தகவலை கூறியதாக பொருள்படுகிறது.

    நெட்டிசன்கள் இந்த தகவல் கொண்ட பதிவுகளை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் நிர்மலா சீதாராமனை கிண்டலடித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் ஷோபா ஓசா என்பவர் இதே தகவலை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது ட்விட்டை நூற்றுக்கும் அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகள் உண்மையென நம்பி ஹரியானா அரசாங்கத்தில் முன்னாள் கேபினட் அமைச்சராக இருந்த மஹிந்தர் பிரதாப் நிர்மலா சீதாராமனை கிண்டலடித்திருக்கிறார்.

    ஷோபா ஓசா ட்விட்

    இவ்வாறு வைரலாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில், நிர்மலா சீதாராமன் அப்படி ஒரு தகவலை வழங்கவேயில்லை என்பது உறுதியாகியுள்ளது. உண்மையில் உஜாலா திட்டத்தின் கீழ் 35 கோடி எல்.இ.டி. பல்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

    நிர்மலா சீதாரமன் வழங்கிய தகவலை உஜாலா வலைத்தளமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×