search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேகவுடாவுடன் மந்திரி சிவகுமார் சந்திப்பு
    X
    தேவேகவுடாவுடன் மந்திரி சிவகுமார் சந்திப்பு

    முன்னாள் பிரதமர் தேவே கவுடாவுடன் காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சந்திப்பு

    கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான சிவகுமார் இன்று சந்தித்தார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர். இதனால் முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை உள்ளது.

    ராஜினாமா செய்த எம் எல் ஏக்கள் அங்கிருந்து மும்பை சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

    இதற்கிடையே, கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் குற்றம் சாட்டினர்.



    இந்நிலையில், பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான சிவகுமார் இன்று சந்தித்தார்.
    அப்போது, கர்நாடக அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
    Next Story
    ×